செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது.
இதனிடையே இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று இந்த படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அது வெளியான பின்பே ரிலீஸ் தள்ளிப்போவதற்கான காரணம் தெரியவரும்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5-ந் தேதி ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.