தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 1400 க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி. கோடிக்கணக்கான தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது. செம்பருத்தி சீரியல் இன் கிளைமாக்ஸ் இதுவரை இல்லாத அளவில் மிக பிரம்மாண்டமாக வித்தியாசமாக ஒளிபரப்பாக உள்ளது.
இது குறித்த சில தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அதாவது செம்பருத்தி சீரியல் கிளைமாக்ஸ் 16 செக்மென்ட்களாக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பார்வதிக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக கோவிலில் இருந்து அழைத்து வரும்போது அவரை அடியாட்கள் கொள்ள முயற்சி செய்ய கார்த்தியும் கார்த்தியும் தம்பியும் இவர்களை அடித்து துவம்சம் செய்து பார்வதியை காப்பாற்ற முயல் அழிவு போது இவர்களுக்கு உதவியாக வித்யா நம்பர் ஒன் சஞ்சய் என்ட்ரி கொடுக்கிறார்.
அதன் பிறகு பார்வதியை மீட்டு விழா நடத்தும் இடத்திற்கு அழைத்துச் சென்றதும் வணக்கம் பார்வதிக்கு வழங்கப்பட்ட விலைமதிப்புள்ள புடவையில் புடவை பற்றி ஒரு திரவத்தை தடவ அதன் பிறகு என்ன நடக்கப் போகிறது?
பின்னர் பார்வதியை கொல்ல வனஜா வெடிகுண்டு வைத்து திட்டம் போட்டு இருக்க அதை அகிலாண்டேஸ்வரி எப்படி முறியடிக்கிறாள்? பார்வதி குடும்பத்திற்கு பெரிய எதிரியாக இருக்கும் நந்தினி அகிலாண்டேஸ்வரியை கத்தியால் குத்தி விட அகிலாண்டேஸ்வரியும் பதிலுக்கு நந்தினியை குத்தி விட இருவரில் யாருக்கு என்ன ஆகிறது? என விறுவிறுப்பாக ஒளிபரப்பாக உள்ளது.
இப்படி பரபரப்பான காட்சிகள் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் மற்ற சீரியல் பிரபலங்கள் இந்த சீரியலில் பங்கேற்று சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று நடிக்க உள்ளனர்.
இதனால் செம்பருத்தி சீரியல் கிளைமாக்ஸ் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். செம்பருத்தி சீரியல் இது சூப்பர் கிளைமாக்ஸ் காட்சிகளை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.