விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர் தான். அதில் பங்கேற்ற நிறைய பாடகர்கள் சினிமா துறையில் ஃபேமஸான பேக்ரவுண்ட் சிங்கர்ஸ்சாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் இந்நிகழ்ச்சியின் மூலம் தம்பதியினராக கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.
இதில் செந்தில் அவர்கள் அந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் வென்றிருக்கிறார். இதன் மூலம் வெள்ளி திரையில் பல சினிமா பாடல்களையும் பாடி அசத்தி வரும் இந்த தம்பதியினரை சில பிரபலங்கள் ஏமாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் முதல் பாடலான “வெறித்தனம்” என்ற பாடலை விஜய் முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிருந்தார். இந்த பாடல் வரிகளை விவேக் எழுதிருந்தார். ஆனால் இந்தப் பாடலை முதலில் பாடியது பாடகர் செந்தில் தானம். ஆனால், அடுத்த விஜய் பாடவுள்ளார் என்று படக்குழு முடிவு செய்தும், செந்தில் பாடியதை நீக்கி விட்டு விஜய் பாடியதை சேர்த்துவிட்டார்களாம்.
அதேபோல் இவரது மனைவி ராஜலட்சுமியும் தற்போது ரிலீசாக இருக்கும் விருமன் திரைப்படத்தில் இரண்டாவது பாடலான ‘மதுரை வீரன்’ என்ற பாடலை பாடிருந்தாராம். ஆனால், இந்த பாடலை இயக்குனர் ஷங்கர் மகள் பாட வந்ததால் படக்குழு ஓகே சொல்லி, ராஜலட்சுமி பாடியதை நீக்கிவிட்டு அதிதி பாடியதை சேர்த்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் வளர்ந்து வரும் இந்த நாட்டுப்புற தம்பதியினரை இப்படி முன்னணி பிரபலங்கள் பாட வைத்து ஏமாற்றியது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
