இந்திய திரையுலகில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார்.
விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி இருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் செந்தில் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ரஜினி மற்றும் செந்திலின் காம்போ இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.