சின்னத்திரை நடிகர் நேத்ரன் காலமாகியுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்ன திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நேத்ரன்.
இவருக்கு அஞ்சனா மற்றும் அபிநயா என்ற இரண்டு மகள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது மகள் அபிநயா அப்பாவிற்கு புற்றுநோய் இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து இருப்பதாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.