Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஏ ஆர் ரகுமான் இசையில் தாய் மண்ணே வணக்கம் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சின்னத்திரை நடிகை.!

serial actress divya krishnan viral reels video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான வேலைக்காரன் சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை நடிகையான திவ்யா கிருஷ்ணன் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் காமெடியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

தற்போது அவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவரே பாடி அசத்தியிருந்த “தாய் மண்ணே வணக்கம்” என்ற தேசிய பாடலுக்கு இந்திய நாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திவ்யா கிருஷ்ணன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் திவ்ய கிருஷ்ணனின் இந்த தேசிய பற்றை பாராட்டி தங்களது கமெண்ட்களில் சல்யூட் அடித்து பாராட்டி வருகின்றனர்.