தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மகாலட்சுமி.
இவருக்கு அணில் என்பவரிடம் திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இதையடுத்து கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தந்தையர் தினமான நேற்று தன்னுடைய அப்பா மற்றும் முதல் கணவருக்கு பிறந்த மகனுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மகாலட்சுமியின் மகன் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram