Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவருடன் சேர்ந்து பதிவு செய்த புகைப்படங்களை டெலீட் செய்த பிரியங்கா நல்காரி.. என்ன காரணம் தெரியுமா?

serial actress priyanka-nalkari-separated-with-husband

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பிரியங்கா நல்காரி.

இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதா ராமன் சீரியலில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சீரியலில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு தமயந்தி சீரியலில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இப்படியான நிலையில் இவர் தனது கணவரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் சேர்ந்து பதிவு செய்த புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை டெலீட் செய்துள்ளார்.

serial actress priyanka-nalkari-separated-with-husband
serial actress priyanka-nalkari-separated-with-husband