தமிழ் சின்னத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷிதா.
இதைத்தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவர் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நள்ளிரவில் மாங்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய போய் புகார் அளித்துள்ளார்.
