Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் மகன் மர்மமான முறையில் மரணம்?? – அதிர்ச்சி தகவல்.!!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ். சன் டிவி, விஜய் டிவி போன்ற பல்வேறு சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் சந்தோஷ் ( வயது 35 ) நேற்று இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரை சந்தோஷ் இறப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடாததால் சந்தேகம் வலுத்து வருகிறது .

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் அமைந்துள்ள இல்லத்தில் சந்தோஷின் உடல் அடக்கம் செய்யாமல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சந்தோஷ் மரணத்திற்கு காரணம் என்ன?? தகவலை வெளியிடாதது ஏன் என ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளன.

உண்மையில் நடந்தது என்ன? சந்தோஷத்துக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்களை சீரியல் நடிகை தரப்பிலிருந்து வெளி வந்தால் தான் தெரியும்.