தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம், வாணி ராணி ஆகிய சீரியல் நடிகை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.
30 வயதாகும் இவர் கடந்த வருடம் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாடி பில்டர் ஆன அரவிந்த் சேகர் இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான ஒரே வருடத்தில் ஸ்ருதி சண்முகப்பிரியாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா என ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.