கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் சீரியல் வட்டாரம் மீண்டும் புத்துணர்வுடன் படப்பிடிப்புகளில் இறங்கியுள்ளன. டிவியில் புதுப்புது Episodeகள் ஒளிபரப்பட்டு வருகின்றன.
தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் பலரின் ஆதரவை பெற்ற ஒன்று காற்றின் மொழி.
இதில் ஜோடியாக நடித்துக்கொண்டிருப்பவர்கள் சஞ்சீவ் மற்றும் பிரியங்கா ஜெயின். கண்மணி என்ற கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகிறார்.
இந்நிலையில் சீரியலில் ஹீரோயின் தோழியாக வரும் வைஷ்னவி அவரின் நண்பரான இயக்குனர் சாய் விக்னேஷ்வர் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
இதனை முன்னிட்டு நிச்சயதார்த்தமும் செய்துள்ளனர். இத்தகவை வைஷ்ணவி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வைஷண்வியும் இந்த சீரியலில் ரோசி வேடத்தில் நடித்து வருகிறார்.