தமிழ் சின்னத்திரையில் சீரியல்களில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடிகளாக மாறி வாழ்ந்து வருபவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிற்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஜோடி சேர்ந்து நடித்து ரியல் ஜோடிகளாக மாறியவர்கள் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா.
ஏற்கனவே பல சீரியல்களில் நடித்துள்ள விஷ்ணுகாந்த் தற்போது மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல் சம்யுக்தாவும் பிசியாக நடித்து வருகிறார்.
ஒரு மாதத்திற்கு முன்னால் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இருந்து திருமண புகைப்படங்களை டெலிட் செய்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே விவாகரத்தில் நடக்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி ரசிகர்கள் பலரும் இருவரிடமும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் விஷ்ணுகாந்த் ரசிகர்களின் கேள்விக்கு விரைவில் பதில் தெரிய வரும் என தெரிவிக்கின்றார். இதனால் திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்தா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.