விஜய்யை மாஸ்டராக, வாத்தியாக, கல்லூரி பேராசிரியராக திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார். ஏப்ரல் 9 ம் தேதியே தமிழ் புத்தாண்டு ஸ்பெஷாக வெளியாக வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது.
படக்குழு தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடலாம் என காத்திருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளுக்காக டிரைலரை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் பட ரகசியம் கருதி பின்னர் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி மாஸ்டர் திரைப்படம் மிக சிறப்பாக வந்துள்ளதாகவும், டிரைலரை பார்த்துவிட்டதாகவும், அது சிறப்பாக வந்திருப்பதாகவும், மக்களை இப்படம் கவரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியுள்ளார்.