தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மிஸ்டர் மனைவி. செம்பருத்தி சீரியல் மூலம் நாயகி ஆக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்த ஷபானா இந்த தொடரில் நாயகியாக நடித்து வந்தார்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் ஷபானாவின் அஞ்சலி கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.
இதற்கான காரணம் கர்ப்பம் தான் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் அது காரணம் இல்லை, கர்ப்பமாக இருந்திருந்தால் அதை நாங்களே அறிவித்திருப்போம் என ஷபானா தெரிவித்துள்ளார்.
திரைப்பட வாய்ப்பு காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளிவந்துள்ளது.
