தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது டாக்டர், அயலான் போன்ற படங்களில் நடித்து முடித்து நிலையில், அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தை அடுத்து, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அசோக் இயக்க உள்ளார். இப்படத்திற்கு ‘சிங்கப்பாதை’ என தலைப்பு வைக்க உள்ளார்களாம்.
இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் பட பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் ஒளிப்பதிவாளர் டுட்லி, சிவகார்த்திகேயனின் ‘சிங்கப்பாதை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தமிழில் ஜுங்கா, ஆக்ஷன், பூமி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.