Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜவான் படம் பற்றி கேட்ட ரசிகன்.. ஓபனாக பேசிய ஷாருக்கான்.. வைரலாகும் டிவிட்

shahrukh khan reply to fan question

பாலிவுட் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக திகழ்பவர் தான் ஷாருக்கான். இவர் திரையுலகிற்கு வந்து 30 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அதில் அட்லி இயக்கத்தில் உருவாகும் “ஜவான்” திரைப்படத்தைப் பற்றி பேசியுள்ளார்.

அதாவது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “ஜவான்”. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2023 ஆம் ஆண்டில் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில் ஷாருக்கானிடம் ரசிகர்கள் இப்படத்தைப் பற்றி கேட்டபோது அவர் அட்லியின் படங்களை அனைவரும் பார்த்திருப்பார்கள். இது போன்ற படங்கள் நான் இதுவரை செய்யாத ஒன்று. நயன்தாரா சிறப்பாக நடித்துள்ளார். ஒரு “நடிகனாக ‘ஜவான்’ போன்ற படத்தில் நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்”என்று பதில் அளித்திருக்கிறார்.