மலையாளத்தில் நடிகையாக அறிமுகமான ஷகிலா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி பல படங்களில் நடித்துள்ளார். 1990 களில் வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென ரசிகர் வட்டத்தை சேர்த்து புகழ் பெற்றார்.
இந்நிலையில், ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று உருவாகி உள்ளது. இப்படத்தை இந்திரஜித் லங்கேஷ் இயக்கி இருக்கிறார். நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது.
இப்படத்தில், ஷகிலாவாக ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.