மலையாள பட உலகில் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. அங்குள்ள மம்முட்டி, மோகன்லால் படங்களை ஷகிலாவின் படங்கள் வசூலில் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தன. ஷகிலா படங்கள் திரைக்கு வரும்போது மற்ற நடிகர்கள் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீசை தள்ளிவைக்கும் நிலைமை இருந்தது.
சமீப காலமாக குணச்சித்திர கதாபாத்திரம், காமெடி கதாபாத்திரங்களில் ஷகிலா நடித்து வந்தார். இந்நிலையில், சின்னத்திரையில் வெளியாகும் ரியாலிட்டி ஷோவில் ஷகிலா கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
மேலும் இவருடன் நடன இயக்குனர் பாபா பாஸ்கர், கடைக்குட்டி சிங்கம் தீபா உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.