மகனுடைய ஆசையை நிறைவேற்ற ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார் ஷாலினி அஜித்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது காதலித்து,பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். அவர்களுக்கு அனோஷ்கா , ஆத்விக் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
அஜித் குமாரின் மகனான ஆத்விக் கால்பந்து விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருப்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே அவரது பள்ளியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியானது.
குறிப்பாக கால்பந்து அணிகளில் ரியல் மேட்ரிக் அணியின் தீவிர ரசிகராக ஆத்விக் இருந்துள்ளார். இன்று இந்த அணி ஸ்பெயின் நாட்டில் சாண்டியாகோ மைதானத்தில் விளையாட உள்ள போட்டியை நேரில் காண ஆத்விக் ஆசைப்பட்டதால் ஷாலினி அஜித் அவரை கூட்டிச் சென்றுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram