நடிகர் அஜித் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் போதே அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் சுத்தம், எந்த ஒரு அப்டேட்டும் இல்லை.
ஆனால் அவர் இந்த நேரத்தை தனது வீட்டில் தோட்டம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். இந்த தகவல் ஒரு ஆங்கில தளத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது.
அண்மையில் அஜித் விரைவில் வலிமை படப்பிடிப்பில் இணைவார் என செய்திகள் வந்தது. தற்போது ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் ரசிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.