Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலர் தினத்திற்காக கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய ஷாலு ஷம்மு – வைரலாகும் புகைப்படங்கள்

shalu shamu photoshoot

கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு, படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.