தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரிக்க தமன் இசை அமைக்கிறார்.
படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இவர்களை தொடர்ந்து இப்படத்தில் பிரபல தமிழ் நடிகர் ஷாம் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Actor Shaam might join the cast of #Thalapathy66 for Vijay's brother role pic.twitter.com/Fh7p6fE4C3
— #Thalapathy66 (@Vijay66OffI_) April 22, 2022