அவ்வளவு குண்டாக ஆகிட்ட என கணவரிடம் பல்பு வாங்கியுள்ளார் ஷாமிலி சுகுமார்.
தமிழ் சின்னத்திரையில் ரோஜா உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாமிலி சுகுமார். இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து அடிக்கடி ஷாப்பிங் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் இரண்டாவது முறையாக ஷாப்பிங் செய்துள்ளார்.
ஏழு அடுக்கு தளத்துடன் மிக பிரம்மாண்டமாக செயல்பட்டு வரும் இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை ஆபரணங்கள் வரை அனைத்தும் கிடைக்கின்றன.
அப்படி கிச்சனுக்கு தேவையான பாத்திரங்கள் கிலோ 699 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதை அறிந்த ஷாமிலி தன்னுடைய வீட்டிற்கும் சில பாத்திரங்களை வாங்க அவருடைய கணவர் அப்படியே தினமும் சமைக்கிற மாதிரி தான் என கிண்டல் அடித்துள்ளார்.
பிறகு பட்டுப் புடவைகள் என விதவிதமான ஆடைகளையும் வாங்கியுள்ளார். அப்போது டபுள் எக்ஸ் எல் ஆடைகளை எடுத்து கொடுக்குமாறு சேல்ஸ் மேனிடம் கேட்க உடனே அவருடைய கணவர் காதருகே சென்று அவ்வளவு குண்டாவா ஆகிட்ட என கேட்டு பல்பு கொடுத்துள்ளார்.
இவர்கள் இருவரும் சேர்ந்து காமெடி கலாட்டாவாக ஷாப்பிங் செய்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.