Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுடன் கூட்டணி அமைக்கும் ஷங்கர்?

Shankar to team up with AR Rahman again

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகையான பேசூஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஏ.ஆர்.ரகுமானிடம், ரசிகர் ஒருவர் தெலுங்கு படத்திற்கு எப்போது இசை அமைக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர், மிக விரைவில் தெலுங்கு படம் ஒன்றிற்கு இசையமைக்க உள்ளதாக கூறினார். இதன்மூலம் அவர் குறிப்பிட்ட அந்த தெலுங்கு படம் ஷங்கரின் படமாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், முதல்வன், பாய்ஸ், இந்தியன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.