பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியலின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சரண்யா.
இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் தெலுங்கு சீரியலான ரோஜா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் தற்போது இவர் ஆயுதஎழுத்து எனும் பிரபல தொடரில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.
இது குறித்து நடிகை சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங்கில் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் காதலித்து வரும் ராகுல், தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் நடிகை சரண்யா தனது காதலனுக்கு எழுதிய கவிதையையும் பதிவிட்டுள்ளார். இதோ அவரின் பதிவு..