Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் ரசிகர்கள் செய்த வேலை. நன்றி தெரிவித்து ஷாருக்கான் போட்ட பதிவு

sharukh-khan latest tweet viral

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் செப்டம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’. பான் இந்தியா படமாக வெளியான இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது.

இந்த வெற்றியை ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். இதில் விஜய் ரசிகர்கள் ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், “வாழ்த்துகளுக்கு நன்றி. விஜய்யின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். லவ் யூ விஜய்” என்று பதிவிட்டுள்ளார்.