எங்கேயும் எப்போதும் படத்தை காதலர்கள் மறக்கமாட்டார்கள் தானே. ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றும் கூறலாம். 2011 ல் வந்த இப்படத்தை அஞ்சலி, ஜெய், சர்வானந்த், அனன்யா நடிக்க சரவணனன் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார்.
தெலுங்கு நடிகரான சர்வானந்த் சேரன் இயக்கிய ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
காதல்னா சும்மா இல்லை, நாளை நமதே ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாம் அவரை கடைசியாக பார்த்திருப்போம்.
தற்போது அவருக்கு வயது 36. இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுவயது முதலே நன்கு அறிமுகமான தோழியை காதிலித்து வந்ததாகவும், அந்த பெண் தொழிலதிபராக இருக்கிறாராம். இருவரின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார்களாம்.