தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.
அதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.