சூர்யாவின் காட்டுப் பயலே பாட்டுக்கு புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் ஷிவானி நாராயணன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாக்கிய ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் சூரரை போற்று.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப் பயல் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேவரைட் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
தற்போது இந்த காட்டுப் பயலை பாடலுக்கு சென்சேஷனல் நடிகையான ஷிவானி நாராயணன் புடவையில் கவர்ச்சி ஆட்டம் போட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஷிவானி நாராயணன் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் ஒரு போட்டியாளராக பங்கேற்க உள்ளார். இதற்காக தற்போது ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.