Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் ஷாக் தகவல்

shocking-details-of-bb-7-13th-week-elimination update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த வாரம் 13 வது வாரத்திற்கான எவிக்ஷன் நடைபெற உள்ளது. மிக குறைந்த ஓட்டுக்களை பெற்று மாயா மற்றும் நிக்சன் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றனர்.

ஆகையால் இவர்களில் ஒருவர் அல்லது இருவருமே இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரவீனா வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரவீனா பெற்றோரின் கோரிக்கையால் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாயா நிக்சனை காப்பாற்றுவதற்காகவே விஜய் டிவி இப்படி ஒரு வேலையை செய்ததாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது இன்றைய எபிசோடில் தெரிந்து விடும், பொறுத்திருந்து பார்க்கலாம்.

shocking-details-of-bb-7-13th-week-elimination update
shocking-details-of-bb-7-13th-week-elimination update