Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் கடைசி படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

shocking-information-about-superstar-rajinikanth

இந்திய திரை உலகில் ரசிகர்களின் மத்தியில் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். அவர் தற்பொழுது தனது 169 வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

பிரம்மாண்ட செட்டுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் #Thalaivar 170 என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் அடுத்த படத்தில் டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினியை வைத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி #Thalaivar171 திரைப்படத்தை இயக்கப் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த இரண்டு திரைப்படங்களையும் Lyca நிறுவனம் தயாரிக்க போவதாகவும் மேலும் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் படம் தான் நடிகர் ரஜினிகாந்தின் கடைசி படம் என்றும் அதன் பிறகு அவர் எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் என பரபரப்பான அதிர்ச்சி தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 shocking-information-about-superstar-rajinikanth

shocking-information-about-superstar-rajinikanth