தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ப்ரைம் டைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பெரிய அளவில் வரவேற்பு இல்லாத சீரியல்களை உரையாடியாக முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக நம்ம வீட்டு பொண்ணு, காற்றுக்கென்ன வேலி மற்றும் மௌனராகம் 2 போன்ற சீரியல்களை மொத்தமாக முடித்து விடலாம் என விஜய் டிவி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.