தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக நானே வருவேன் என்ற திரைப்படம் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் இந்துஜா நாயகியாக நடித்துள்ளார். மேலும் தனுஷுக்கு வில்லனாக செல்வராகவனே இப்படத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படம் அதிகாலை 4 மணி காட்சிகளில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
