அஜித் நடிப்பில் வந்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் இவரது நடிப்பில் மாறா படம் வெளியானது. தமிழில், இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி, கே-13 என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் கலியுகம் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்குகிறார்.
ஹாரர் திரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் கலியுகம் என்றால் என்ன? கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட இருக்கிறது. அதோடு, 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படம் உருவாக்கப்பட இருக்கிறது.