Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவியை வர்ணித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஸ்ரேயாவின் கணவர்

shriya-husband-reply-to-fan-tweet

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மழை என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். இந்தப் படத்தை தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிவாஜி படத்தில் நடித்தார்.

வடிவேல் உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய காரணத்தினால் இவரது மார்க்கெட் சரிந்து வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இந்த நேரத்தில் ரஷ்ய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் ஸ்ரேயாவின் முன்னழகை பற்றி வர்ணித்துள்ளார்.

ரசிகரின் இந்த வர்ணிப்பு குறித்து அவரது கணவர் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது உங்களது கருத்துடன் நான் உடன்படுகிறேன் என தெரிவித்துள்ளார். பொதுவாக நடிகைகளை ரசிகர்கள் வர்ணிப்பதால் அவரது நண்பர்கள் கோபத்தையே பதிலாக கொடுக்கும் நிலையில் ஸ்ரேயாவின் கணவர் உங்களது கருத்துடன் உடன்படுவதாக பதில் அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

shriya-husband-reply-to-fan-tweet
shriya-husband-reply-to-fan-tweet