நடிகை ஸ்ருதி ஹாசன் பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தவர். சில படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தார்.
கடந்த சில வருடங்களாக தமிழில் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். ஆனால் பாடும் திறமை கொண்ட அவருக்கு பாடல் நிகழ்ச்சிகள், ஆல்பங்கள் கைகொடுத்து வந்தன.
இந்நிலையில் தெலுங்கில் தற்போது ரவிதேஜா, கோபி சந்த் கூட்டணியில்இணைந்தார். ஏற்கனவே 7 வருடங்களுக்கு முன் இவர்கள் இணைந்து நடித்த Balupu Krack ஹிட்டானது.
தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய ஸ்ருதி ஹாசன் அம்மா மற்றும் மகளாக நடிக்கிறாராம். இப்படியாக நடிப்பது இதுவே முதல் முறையாம்.