தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தமிழில் கடைசியாக ‘லாபம்’ திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது “சலார்” திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.இந்நிலையில் தனது காதலனுடன் தங்கியிருக்கும் சுருதிஹாசன். அவ்வப்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருப்பார்.
இதனிடையே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் ஸ்ருதி ஹாசனிடம். அவருக்கு பிடித்த மனிதர் யார்? என்ற கேள்வி கேட்டிருந்தனர். அதற்கு ஸ்ருதி அவரின் காதலனான சாந்தனுவின் புகைப்படத்தை பதிவிட்டு பதிலளித்திருக்கிறார். இந்த விஷயம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

shruti haasan reply to fan question