Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலனுக்கு முத்த மழை பொழிந்த சுருதிஹாசன் – வைரலாகும் புகைப்படம்

Shruti Hassan kisses on her boyfriend

நடிகை சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபகாலமாக அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகாவுடன் நெருங்கிய பழகி வருகிறார். அவரை சுருதிஹாசன் காதலிப்பதாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது காதலனுடன் சுருதிஹாசன் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் பரவி வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் காதலன் சாந்தனுவுடன் மும்பையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு சென்றிருந்தார் சுருதிஹாசன். அங்கு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபடி புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

சுருதிஹாசன் வெளியிட்டுள்ள தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். சுருதியின் காதலன் சாந்தனு ஹசாரிகா ராப் பாடகர் ஆவார். இதுதவிர டூடுல் கலைஞராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.