Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோஜா சீரியல் குறித்து லேட்டஸ்ட் தகவல் கொடுத்த சீரியல் நடிகர் சிப்பு சூரியன்

sibbu suriyan about roja serial end update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரோஜா. ஆரம்பத்தில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு காரணமாக இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சரிகமப தயாரிப்பில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

இதன் காரணமாக சீரியலில் நாயகனாக நடித்த சிப்பு சூரியன் ரசிகர்களுக்கும் தன்னை நம்பி அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த தயாரிப்பு நிறுவனம் மற்றும் சன் டிவிக்கும் நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் இந்த வாரத்தோடு ரோஜா சீரியல் முடிவுக்கு வர இருப்பது உறுதியாக உள்ளது.

இதனால் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஆலியா மானசா நடிக்க உள்ள இனியா சீரியல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில் இதே நேரத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திக் நடிக்க உள்ள கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் கார்த்திகை தீபம் சீரியலுக்கு ஆல்யா மானசாவின் இனியா சீரியல் டப் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

sibbu suriyan about roja serial end update
sibbu suriyan about roja serial end update