தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிபு சூரியன்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இருந்து இவர் பாதியில் வெளியேறப் போவதாக அறிவித்து பின்னர் ரசிகர்களின் கோரிக்கையால் ரோஜா சீரியலில் தொடர்ந்து நடித்தார்.
இந்த நிலையில் இந்த வாரத்துடன் ரோஜா சீரியல் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. இப்படியான நிலையில் சிபு சூரியன் அடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு இவரை அடிக்கடி ஜீ தமிழ் ஆபீஸ் பக்கம் பார்க்க முடிவதாக சொல்கின்றனர். விரைவில் சீரியல் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

sibu-suriyan-in-upcoming-serial update