Tamilstar
Health

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்..!

Side effects of eating cucumber at night

வெள்ளரிக்காய் இரவில் சாப்பிட்டால் அது உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுகிறது.

கோடை காலம் தொடங்கியதும் அனைவரும் விரும்பி உண்ணும் காய்கறி பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இது நீரேற்றம் நிறைந்த காயாக இருப்பதால் இது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. ஆனால் இதனை தவறான நேரத்தில் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா?.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை உருவாக்கி விடும். குறிப்பாக மலச்சிக்கல், அஜீரணம் பிரச்சனையை உருவாக்கிவிடும்.இது மட்டும் இல்லாமல் தூக்கம் வராமல் சிரமத்தை ஏற்படுத்தி விடும். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதனால் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கமின்மை ஏற்படும்.

ஆனால் வெள்ளரிக்காயை பகலில் சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் இது ஒரு முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. மிக முக்கியமாக இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து எலும்புகளுக்கு வலுவை கொடுக்கிறது.

எனவே பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் வெள்ளரிக்காயை இரவில் சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்வோம்.