ஆளி விதைகளை நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது நமக்கு பேராபத்தை விளைவிக்கிறது.
பெரும்பாலானோர் உடலின் எடையை குறைத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகமாக ஆளி விதைகளை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆளி விதையில் அளப்பறிய நன்மை இருக்கிறது. இது ஆரோக்கியமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது ஆபத்தை விளைவிக்கிறது.
முதலில் வயிற்றுப்போக்கு பிரச்சனை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரக் கூடும்.
இப்படி வரும்போது மருத்துவர்களை ஆலோசித்து பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஆளி விதையை சாப்பிட்டு தண்ணீர் குறைவாக குடித்தால் அது குடலில் அடைப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையை உண்டாக்கும். இது மட்டும் இல்லாமல் அலர்ஜி பிரச்சனையை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. பிறகு மூச்சு விடுவதிலும் சிரமத்தை ஏற்படுத்தி விடும்.
எனவே ஆளி விதைகளை அளவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்