தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சித்தார்த். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சமந்தாவை காதலித்து வந்த இவர் பிறகு பிரேக் அப் செய்தார். அதன் பிறகு தான் நடிகை சமந்தா நாகசைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நேரத்தில் சித்தாத் அவர்களின் முதல் மனைவி மேக்னவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

sidharth-in-first-wife-photo