Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சைமா விருதுகளின் சிறந்த நடிகருக்கான விருது லிஸ்ட் இதோ..உங்கள் ஃபேவரைட் நடிகர் யார்?

siima awards released the list for best actor update

ஆண்டுதோறும் தென்னிந்திய நடிகர்களை கௌரவிக்கும் விதமாக சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. அதில் பல திறமை வாய்ந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றனர். அந்த வகையில் 2021- ஆம் ஆண்டிற்கான சைமா விருதுகளின் நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில் தமிழில் சிறந்த நடிகருக்கான நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அப்பட்டியலில் கர்ணன் படத்திற்காக நடிகர் தனுஷ், மாஸ்டர் படத்திற்காக நடிகர் விஜய், மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு, சார்பட்டா பரம்பரை படத்திற்காக நடிகர் ஆர்யா, டாக்டர் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன், ஜெய் பீம் படத்திற்காக நடிகர் சூர்யா ஆகியோர் சிறந்த நடிகருக்கான நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகியுள்ளனர்.

இதில் யார் இந்த விருதை பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களின் இடையே அதிக அளவில் நிலவி வருகிறது. மேலும் இது குறித்து சில கருத்துக்களையும் ரசிகர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

siima awards released the list for best actor update
siima awards released the list for best actor update