Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெந்து தணிந்தது காடு படத்தின் புரோமோஷனுக்காக பட குழு செய்த செயல்

silambarasan-film-promoted-by-bus

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்போது கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடிக்க ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வரும் 15ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரமோஷனை இயக்குனர் கௌதம் மேனன் பேருந்து மூலம் செய்து வருகிறார். அதாவது அவர் இப்படத்திற்காக ஒரு சிறப்பு பேருந்து தயார் செய்து உள்ளனர். இந்தப் பேருந்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் பேருந்தின் உள்ளே படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை ஓடவிடப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பேருந்தின் வெளியேயும் உள்ளேயும் படத்தின் காட்சிகள் போஸ்டர்களாகவும், ஓவியங்களாகவும் வரைந்து வைத்து படத்தில் பயன்பபடுத்தப்பட்ட டிராவல்பேக், இசக்கி புரோட்டா, சைக்கிள், வயர் கூடை, தொரத்தி கம்பு, தலையணை உள்ளிட்டவையும் பேருந்தின் உள்ளே காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பான பேருந்தின் பயணத்தை படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் துவக்கி வைத்துள்ளனர். படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ள நிலையில், முத்துவின் பயணம் உங்களது டவுன்களில் வரவுள்ளது என்று இந்த பேருந்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

  silambarasan-film-promoted-by-bus

silambarasan-film-promoted-by-bus