இந்திய சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சையில் இருந்து வந்த SPB உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென மீண்டும் பின்னடைவை சந்தித்து இன்று மதியம் ஒரு மணியளவில் உயிரிழந்தார்.
இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சிம்புவும் அறிக்கை ஒன்றின் மூலமாக தன்னுடைய இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் எத்தனை ஆயிரம் பாடல்கள்.. பாடிக் கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் மன்னன்.
சாதாரணமான பாடகர்கள் எஸ் பி பி யின் பாடல்கள் அனைத்தும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
என் குடும்பத்தில் அவருடைய நிகழ்வுகள் என்றும் மறையாது. பாடும் நிலாவே பாடலுக்கு என்னப்பா கம்போஸ் செய்ய எஸ்பிபி பாட வந்தார்.
குட்டிப்பையன் நான் ரெக்கார்டிங் பன்ன உட்கார்ந்து இருந்தேன் வேற யாராவது இருந்தால் பாட மாட்டேன் என கூறி இருப்பார்கள் ஆனால் எஸ்பிபி பாடினார். இன்றுவரை அது என்னால் மறக்கவே முடியாது.
அதேபோல் என்னுடைய முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் இவன்தான் நாயகன் என்ற பாடலை எஸ்பிபி தான் பாடிக் கொடுத்தார்.
முதன்முதலில் இவன்தான் நாயகன் என எனக்காக உச்சரித்த குரல். இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேல் பாலு சார் என தெரிவித்துள்ளார்.
மேலும் எஸ்பிபி யாரையும் காயப்படுத்த மாட்டார் தவறாக புரிந்து கொண்டால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவார் அப்படி குழந்தை மனம் கொண்டவர்.
இப்போது உங்களுக்கு விடை கொடுத்து மீண்டும் இந்த மண்ணில் உங்களை வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே.. லவ் யூ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.