சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது.
இவ்வளவு நாளாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட ஒரளவு கட்டுப்பாட்டில் இருந்த கொரானா கோயம்பேடு மார்க்கெட்டால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக கடலூர் இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடலூரைச் சேர்ந்த சிம்பு நற்பணி மன்ற தலைவர் சிம்பு ஆனந்த் என்பவரும் கடந்த ஒரு வாரமாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த சிம்பு அவரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
