தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் சிம்பு. தொடர் சர்ச்சைகள் காரணமாக சமீபகாலமாக படங்களில் நடிக்காமல் இன்று தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்பாகவே சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள பக்கா கிராமத்து கதை படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் நடிகர் சிம்பு சமீபத்தில் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். சுசீந்திரன் படத்தில் கெட்டப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக தன்னுடைய முகத்தை மூடியபடி கோவிலை வலம் வந்தார்.
இதனையடுத்து தற்போது இவர் மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் சிம்பு மன்மதன் கெட்டப்பில் உள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்காக கோவில் கோவிலாக ஏறி பரிகாரம் செய்து வருகிறாரா சிம்பு என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
#Simbu seeks blessings at #MaduraiMeenakshi temple pic.twitter.com/CvK0jsX309
— @Yeruvaka99 – Bujji (@Yeruvaka99) October 10, 2020
சுசீந்திரன் இயக்கும் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்தும் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன.
Shooting spot pic of #SilambarasanTR 😎💪🔥#Suseenthiran 's Film#Simbu #SilambarasanTR pic.twitter.com/fxhIfmMoKV
— SILAMBARASAN🔥RETURNS (@SIMBU_RETURNS) October 10, 2020