நடிகர் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் STR 46, இப்படத்திற்காக செம பிட்டாக மாறியுள்ளார் சிம்பு.
இதன் வீடியோ சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது, அதனை தொடர்ந்து நடிகர் சிம்புவின் ட்விட்டர் பக்கத்தில் STR 46 படத்தின் அப்டேட் வெளியாகி இருந்தது.
இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 26 ஆம் தேதி மதியம் 12.12 க்கு வெளியாகும் என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை சிம்புவின் புதிய தோற்றத்தை காண காத்திருக்கும் ரசிகர்களுக்கு, தற்போதே அவரின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம் அந்த புகைப்படத்தில் முன்பு இருந்ததை விட செம பிட்டாக மாறியுள்ளார். மேலும் படத்தில் இதை விட பிட்டாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது.